Skip to main content

ரூ. 10 ஆயிரம் கோடிக்கு பயிர்கடன் - பட்ஜெட்டில் அறிவிப்பு

Published on 08/02/2019 | Edited on 08/02/2019
Agriculture


2019-2020ம் ஆண்டிற்கான தமிழக அரசின் பட்ஜெட் இன்று (08.02.2019) தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதனை தாக்கல் செய்தார். 
 

விவசாயிகளுக்கு ரூபாய் 10 ஆயிரம் கோடிக்கு பயிர்க்கடன் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. புதுமை வளர்ச்சி திட்டங்களுக்கு ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019 - 20 நிதியாண்டில் விவசாயிகளுக்கு 2000 சூரிய பம்ப் செட்டுகள் வழங்கப்படும். பயிர்க்கடன் மீதான வட்டி தள்ளுபடிக்காக ரூபாய் 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் உதவியுடன் ஏரிகளை புனரமைக்கும் பணிகளுக்காக 300 கோ ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்