Skip to main content

மூதாட்டியை வன்கொடுமை செய்த வட மாநில இளைஞர்கள்; கோவையில் கொடூரம்!

Published on 27/03/2025 | Edited on 27/03/2025

 

Northern state youth misbehaved with 65-year-old woman in Coimbatore

கோவை அருகே உள்ள ஒரு கிராமத்தில் 65 வயதான மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டருகே கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளில் வட மாநிலத்தை சேர்ந்த 3 இளைஞர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் மூதாட்டி தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற வடமாநில இளைஞர்கள் 3 பேர் மூதாட்டி என்றும் கூட பார்க்காமல் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் தப்பி  ஓட முயன்ற 3 இளைஞர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அதிலும் ஒருவர் தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் 2 இளைஞர்களையும் ஒப்படைத்தனர்.  சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் இருவரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய இளைஞரையும் போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே மூதாட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

65 வயது மூதாட்டியை 3 வட மாநில இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்