இன்று சென்னை வந்த நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போதுபேசுகையில்,
நகர சமூகத்தார் மீட்டிங்கிற்கு என்னை வர சொல்லி வேண்டுகோள் விடுத்திருந்தார்கள். இந்த சந்திப்பில் கலந்துகொள்கிறேன். இன்றே பட்ஜெட் செஷன் நடைபெற இருப்பதால் கிளம்பிவிடுவேன். நகரத்தார் தொழிலுக்கு உலக அளவில் பாரதா நாட்டின் புகழை கொண்டு சேர்த்த ஒரு சமூகம்.அதனால் அவர்கள் மீட்டிங்கில் கலந்துகொள்வதில் எனக்கு மகிழ்ச்சி.
தமிழகத்தில் இந்தி திணிப்பா என்ற கேள்விக்கு...?
இந்தி திணிப்பு என்பதெல்லாம் சரியான குற்றச்சாட்டு இல்லை. மத்திய அரசு இந்தி திணிப்பு செய்வதில்லை ஆனால் எங்காவது ஒரு இடத்தில், குறிப்பாக அண்மையில் அஞ்சல்துறை தேர்வு பற்றி பெரிய விவாதம் வசந்துச்சு இதற்கு நான் பார்லிமென்டில் கூட எழுந்து பதில் சொல்லியிருக்கிறேன். எங்காவது இதுபோன்ற விஷயம் நடந்ததென்றால் அப்படி நடக்கிறதே அது தெரிஞ்சு செய்ததா அல்லது தெரியாமல் செய்ததா என கேட்பதில் தப்பொன்றுமில்லை. ஆனால் உடனடியாக இந்தி திணிப்பு என்ற கருத்துக்கு வருவது சரியில்லை.
உண்மையில் மோடி அரசில் ''சிரேஷ்ட பாரத்'' என்ற ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. அந்த நிகழ்ச்சி ஒரு மாநிலத்தின் மொழியை மற்றோரு மாநில மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என ஏற்பாடு செய்யப்படுகிறது. அதில் தமிழ்மொழியை கூட வடமாநிலத்தில் பரப்ப முயற்சி நல்லா நடந்திருக்கிறது. எனவே இதுபோன்று நடந்துவிட்டால் உடனே திணிப்பு என்ற முடிவுக்கு வரவேண்டாம். எனவே இந்தி திணிப்பு இல்லை தமிழை வளர்க்க என்ன முயற்சி இருக்கோ அதில் நாங்களும் ஈடுபடுகிறோம் என்றார்.