Skip to main content

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படுமா?- முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்!

Published on 24/11/2020 | Edited on 25/11/2020

 

 

'நிவர்' புயல் எதிரொலியால் தமிழகம் முழுவதும் நாளை அரசு பொது விடுமுறை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

 

சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "தாழ்வான பகுதிகளான 4,133 இடங்களில், மாவட்ட ஆட்சியர்கள் தனிக் கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளோம். 'நிவர்' புயல் எதிரொலியால் தமிழகம் முழுவதும் நாளை அரசு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. நிலைமைக்கு ஏற்றவாறு விடுமுறை நீட்டிக்கப்படுமா என்பது பற்றி அரசு முடிவு செய்யும். 

 

அத்தியாவசியப் பணிகளில் உள்ள அரசு அலுவலர்கள் மட்டும் நாளை பணிபுரிவார்கள். மக்களுக்காக அரசு இருக்கிறது; எதிர்க்கட்சிகள் என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள். புயல் கரையைக் கடக்கும்போது மக்கள் பாதுகாப்பகாக இருப்பதற்காகவே, நாளை அரசு விடுமுறை விடப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும் வரை, மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். மழை பெய்வதைப் பொறுத்துதான் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறக்கப்படும். ஏரிகளின் கரைகளைப் பலப்படுத்தவும், போதிய மணல் மூட்டைகளை வைத்திருக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்." இவ்வாறு முதல்வர் கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்