வடகிழக்கு பருவமழை தொடங்கியதைடுத்து தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கும், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம் கடலூர், தூத்துக்குடி, நெல்லை, நீலகிரி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில்,
கனமழை காரணமாக நீலகிரியில் குந்தா தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. குந்தாவில் 15 சென்டி மீட்டர் மழையும், கெட்டையில் 10.9 சென்டி மீட்டர் மழையும், அவலாஞ்சி, கிள்ளகோரையில் தலா 9 சென்டி மீட்டர் மழையும் பொழிந்துள்ளது. அதேபோல் வடகிழக்கு பருவமழையால் அப்பர் பவானியில் 7 சென்டி மீட்டர் மழையும், குன்னூரில் 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.