Published on 17/08/2018 | Edited on 17/08/2018

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான தேனி, நெல்லை, கோவை, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் அடுத்து 24 மணிநேரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் மறுநாள் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 26 சென்டி மீட்டர் மழையும், வால்பாறையில் 21 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.