Skip to main content

தினகரன் இந்து மதத்தை கலங்கப்படுத்துகிறாரா? ஜெயக்குமார் கேள்வி

Published on 21/09/2017 | Edited on 21/09/2017
தினகரன் இந்து மதத்தை கலங்கப்படுத்துகிறாரா? ஜெயக்குமார் கேள்வி

முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மயிலாடுதுறை காவிரி ஆற்றில் மூழ்கி, மூழ்கி குளித்து இருக்கிறார். ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும், பொதுச்செயலாளருக்கும் செய்த துரோகம் அவர் காவிரியில் மட்டும் அல்ல ராமேசுவரம், காசி என எத்தனை நதிகளில் நீராடினாலும் பாவம் போகாது. அவரும் அமைச்சர்களும் நீராடியதால் ஆற்றின் புனித தன்மை தான் கெடும். எடப்பாடி பழனிசாமி செய்த துரோகம் தமிழக வரலாற்றில் மன்னிக்க முடியாத குற்றமாகும் என திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியிருந்தார் டி.டி.வி.தினகரன். 

அதற்கு இன்று பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், தினகரன் இந்து மதத்தை கலங்கப்படுத்துகிறாரா? - காவிரி புஷ்கரத்தில் முதலமைச்சர் நீராடியது குறித்த தினகரனின் விமர்சனத்திற்கு அமைச்சர் கேள்வி எழுப்பி உள்ளார்.

சார்ந்த செய்திகள்