Skip to main content

அதிமுகவில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 9 பேரின் பதவி பறிப்பு!

Published on 02/01/2018 | Edited on 02/01/2018
அதிமுகவில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள்
9 பேரின் பதவி பறிப்பு!


அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 9 பேரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை தோற்கடித்து பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று டிடிவி தினகரன் தனது செல்வாக்கை காட்டியுள்ளார். இதையடுத்து, டிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டு வருகின்றனர்.

அவ்வகையில், காஞ்சிபுரம் மத்தியம், வேலூர் மேற்கு, கடலூர் கிழக்கு, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 9 நிர்வாகிகளின் கட்சி பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அதிமுகவில் கோதண்டபாணி, ஜெயந்தி பத்மநாபன், கலைச்செல்வன், கதிர்காமு, எஸ்ஜி சுப்ரமணியன், முத்தையா, சுந்தர்ராஜ், மாரியப்பன் கென்னடி, உமா மகேஸ்வரி ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்