நில அளவை மற்றும் நிலவரித் திட்டத்துறையில் புதிய மென்பொருள் சேவையை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைகளை ஒட்டுமொத்தமாக உட்பிரிவு செய்து நில உரிமையாளர் பெயரில் பட்டா தாக்கல் செய்யப்பட்ட பின்பு, ஒவ்வொரு தனிநபரும் கிரயம் பெறும்போது, சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட உடனேயே, அவர்கள் பெயரில் எந்த மனிதர்களின் தலையீடும் இன்றி, அன்றைய தினமே பட்டா மாறுதல் செய்யும் மிக முக்கிய வசதி இந்த சேவையில் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதோடு அல்லாமல், நகரமயமாக்கலில் நகரளவை செய்யப்பட்ட பின்னர் வருவாய் பின்தொடர் பணி மற்றும் நிலவரித் திட்டப்பணிகள் 8 முதல் 10 ஆண்டுகள் வரை நடைபெற்றுக் கொண்டிருந்த சூழ்நிலையை மாற்றி எளிதாக்கி நகர்ப்புற மக்களுக்கு எளிதாக பட்டா வழங்கும் சேவையும் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்தோடு மேலும் சில புதிய வசதிகளும் இந்த மென்பொருள் மூலம் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.
இந்நிகழ்வில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.