தமிழகத்தில் மிகப்பெரிய மாவட்டமாக உள்ளது வேலூர் மாவட்டம். இந்த மாவட்டத்தின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஒரு விளையாட்டு மைதானம் 1975ல் கட்டப்பட்டது. நேதாஜி விளையாட்டு மைதானத்தை வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்த விளையாட்டு மைதானம் தொடர்பாக வேலூர் மாவட்ட காவல்துறைக்கும் – தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பிரச்சனையாகி வழக்கானது.
இந்த பிரச்சனை தீராமல் தொடர்ந்ததால் காட்பாடியில் 36.68 இடம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு ஒதுக்கப்பட்டது. அந்தயிடம் எங்களுக்கு வேண்டும்மென விஐடி பல்கலைக்கழகம் அரசாங்கத்திடம் கேட்டது. உயர்நீதிமன்றத்தில் வழக்காக தாக்கல் செய்தது.
பத்தாண்டுகளுக்கு முன்பு, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் விளையாட்டு மைதானம் அமைக்க ஒதுக்கப்பட்டயிடத்தை விஐடி பல்கலைக்கழகம் ஆக்ரமித்தது. அதோடு, தன்னுடைய பல்கலைகழக மாணவர்களுக்களை அங்கு விளையாட வைத்தது. அதனை அப்போதைய ஒரு மாவட்ட ஆட்சியராக இருந்த கோபாலகிருஷ்ணன், அதிரடியாக பல்கலைகழகத்தை எச்சரித்து அவர்களை அப்புறப்படுத்தி அங்கு வேலியமைத்தார்.
இது நாங்கள் பயன்படுத்திய இடம், எங்களுக்கே ஒதுக்க வேண்டும்மென தமிழகரசிடம் கோரிக்கை வைத்தார் விஐடி பல்கலைகழகத்தின் துணை வேந்தராக உள்ள முன்னாள் அரசியல்வாதி விஸ்வநாதன். பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தது விஐடி பல்கலைகழக நிர்வாகம்.
இதனை கண்டித்து பல அமைப்புகளும் போராட்டங்கள் நடத்தியது. விஐடி தொடர்ந்த அந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு டி.ஆர்.ஓவாக இருந்த ஒரு அதிகாரி, விஐடி பல்கலைகழகத்தின் கட்டிடங்களில் சில பகுதிகள் வருவாய்துறை மற்றும் நீர் நிலை பகுதிகளை ஆக்ரமித்து கல்லூரி கட்டியுள்ளார்கள் என நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸ்சையும் அவர்கள் முடக்கினார்கள். அதிமுகவில் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி மேல்நடவடிக்கை எடுக்காமல் பார்த்துக்கொண்டார்.
இந்நிலையில் கடந்தாண்டு சென்னை உயர்நீதிமன்றம், அந்தயிடம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கானது தான். அவர்கள் தான் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து அந்தயிடத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க 16.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் வந்ததால் கட்டுமான பணிகள் தொடங்காமல் நின்றது. இந்நிலையில் அந்தயிடத்தில் மைதானம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. அதன்படி, 400 மீட்டர் சுற்றளவு கொண்ட 8 லைன் ஓடுதளம், கூடைப்பந்து மைதானம், கால்பந்தாட்ட மைதானம், கபடி மைதானம், நீச்சள்குளம், வீரர்களுக்கான உடற்பயிற்சி கூடம், பார்வையாளர் அரங்கம் போன்ற அனைத்தும் அமைக்கப்படவுள்ளன. இவைகள் ஓராண்டில் கட்டி முடிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த மைதானம் பயன்பாட்டுக்கு வரும்போது தென்னிந்திய அளவில் பெரிய மைதானமாக இது இருக்கும் என்கிறார்கள்.