நாமக்கல்லில் 13 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் அமைக்கும் பணிகள் ஆறு மாதங்களில் தொடங்கப்படும் என நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கே.என்.நேரு ''50 பேருந்துகள் நிற்கும் வசதியுடன் 54 கடைகள் இருக்கும் வகையில் முப்பத்தி ஏழு கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் நாமக்கல்லில் அமைக்கப்பட இருக்கிறது. பேருந்து நிலையம் அமைப்பதற்கு சாலை வசதி வேண்டும். 23 கிலோமீட்டர் லேண்ட் கையகப்படுத்த பண்ண வேண்டும். எப்படியும் இந்த வேலை 6 மாதத்தில் முடிந்து விடும்'' என்றார்.