திருச்சி சர்வதேச விமான நிலையம் 950 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இருக்கும் அளவை விட இன்னும் பல மடங்கு இடத்தை அரசிடம் இருந்து பெற்று, சர்வதேச அளவிலான தரம் உயா்த்தப்பட்ட விமான நிலையமாக மாறி வரும் திருச்சி விமான நிலையத்தில் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் பல்லாயிரகணக்காண ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டு, தற்போது இருக்கும் விமான நிலைய கட்டிடங்களை தொடர்ந்து புதிய சர்வதேச விமான சேவை முனையம் மேம்படுத்தபட்டு வருவகிறது. முதல்கட்ட பணியாக விமான ஓடுதளங்கள் போடும் பணி நடைபெற்று வருகிறது. சிங்கப்பூா், மலேசியா, கோலாலம்பூா், துபாய், மஸ்கட், உள்ளிட்ட பல் வேறு நாடுகளுக்கும், டெல்லி, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட மாநிலங்களுக்கும் தொடர் விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே தற்போது பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சுமார் 700 புதிய இருக்கைகள் வாங்கப்பட்டு அதை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.