Published on 17/02/2022 | Edited on 17/02/2022
நியூட்ரினோ திட்டத்தை தமிழகத்தில் எந்த காரணம் கொண்டு அனுமதிக்க முடியாது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நியூட்ரினோ விவகாரம் தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பாக உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள தமிழக அரசு, தமிழகத்தில் ஒருபோதும் நியூட்ரினோ திட்டம் தொடங்க அனுமதி வழங்கப்படாது. இந்த திட்டத்தைக் காட்டிலும் வன உயிரினங்களும், மேற்கு தொடர்ச்சி மலைகளும் மிக முக்கியம் என்று தெரிவித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்நிலையில் , " கடந்த பத்தாண்டுகளாக மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி" என பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் ட்வீட் செய்துள்ளார்.