நெடுவாசலில் சுதந்திர தினத்தில் கருப்பு கொடியுடன் உண்ணாவிரதம்!
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி 16 முதல் தொடங்கிய போராட்டம் முதல்கட்டமாக 22 நாளில் தற்காலிகமாக முடிந்தாலும் தொடர்ந்து ஏப்ரல் 12ந் தேதி தொடங்கிய போராட்டம் 126வது நாளாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று நாடே சுதந்திர தினம் கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் நெடுவாசல் கிராமத்தில் கருப்பு கொடி ஏற்றி கிராம மக்கள் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர். தங்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்று கூறி கருப்பு கொடி சுதந்திர தினம் அனுசரித்து வருகின்றனர்.
- இரா.பகத்சிங்