Skip to main content

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்!

Published on 18/09/2020 | Edited on 18/09/2020

 

NEET exam issue arrest


நீட் தேர்வு நடத்திவரும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மருத்துவக் கல்வியை மாநில பட்டியலுக்குக் கொண்டுவர வலியுறுத்தியும் 'மக்கள் பாதை' இயக்கம் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில், 13 மாணவர்களின் தற்கொலைக்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது. உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி இல்லாததால், போராட்டக்காரர்களைக் கலைந்து செல்ல காவல்துறையினர் வலியுறுத்தினர். ஆனால், போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுப்புத் தெரிவித்ததால், காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்தப் போராட்டத்தில் 30 -க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்