நீட் ஒப்புதல்: டிடிவி மற்றும் சசிகலாவின் கூட்டு சதி -
மாதவன் காட்டம்!
டிடிவி மற்றும் சசிகலாவின் கூட்டு சதி இல்லாமல் நீட்டிற்கு தமிழகத்தின் ஒப்புதல் வழங்கியிருக்க வாய்ப்பில்லை என எம்.ஜி.ஆர்.ஜெ.ஜெ.திமுக பொதுச்செயலாளர் மாதவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
செயற்குழுவின் தீர்மானங்கள்!
புரட்சி தலைவி அம்மாவிற்கு 15 கோடியில் மணிமண்டபம் ஆனால் அவர்களின் மரணத்தின் மர்மத்தை அரிய சிபிஐ விசாரணை இல்லை...??
புரட்சி தலைவி அம்மாவின் நினைவிடத்தில், அம்மாவின் மர்ம மரணத்தில் உள்ள 10 சதவீதம்தான் கூறியுள்ளேன் 90 சதவீதம் மீதம் உள்ளது என்ற ஓ.பி.எஸ், ஆட்சியும் அதிகாரமும் இப்பொழுது கையில் இருக்கும் போது இன்னும் அதை விளக்காதது ஏன்.??
அடிப்படை உறுப்பினர் பட்டியலில் இருந்து சசிகலாவை நீக்குவதாகக் கூறிய ஓ.பி.எஸ், இன்னும் நிறைவேற்றாதது ஏன்.??
புரட்சி தலைவி அம்மா அப்போலோ மருத்துவமனையில் இருந்த போது நீட் தேர்வுக்கு ஒப்புதல் அளித்த ஓ.பி.எஸ்... அப்போது டிடிவி மற்றும் சசிகலாவின் கூட்டு சதி இல்லாமல் நீட்டிற்கு தமிழகத்தின் ஒப்புதல் வழங்கியிருக்க வாய்ப்பில்லை...!!
இப்போது யாரை ஏமாற்ற நீட்டிற்கு எதிராக போராட்டம் நடத்துகிறார்கள் டிடிவி அணியினர்...??
இவர்கள் யாவருமே சுயநலத்தோடும், தங்கள் அதிகாரங்கள் தங்கள் கையைவிட்டு போய்விடகூடாது என்றும், காய்கள் நகர்த்துவது மிக விரைவில் வெளிச்சத்திற்கு வரும். அப்போது யாவும் தெளியும், நம் யாவருக்கும் பொழுது விடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.