Skip to main content

கீரமங்கலம் அருகே மர்ம காய்ச்சல்; மேலும் ஒரு சிறுமி பலி

Published on 23/09/2017 | Edited on 23/09/2017
கீரமங்கலம் அருகே மர்ம காய்ச்சலுக்கு
 மேலும் ஒரு சிறுமி பலி

கீரமங்கலம் அருகே மர்ம காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் இனாம் ஊராட்சி காசிம்புதுப்பேட்டை கிராமத்தில் பட்டுக்கோட்டை சாலை பகுதியை சேர்ந்தவர் கண்ணப்பன் மகள் ராதிகா (13) தாய் லோகம்பாள் கூலித் தொழிலாளி. தாயிடம் வளர்ந்து வந்தார். ராதிகாவிற்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் கீரமங்கலத்தில் உள்ள தனியார் கிளினிக்கில் சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார். இருந்தும் காய்ச்சல் குறையவில்லை.

இந்த நிலையில் வெள்ளிக் கிழமை மாலை ராதிகாவிற்கு அதிகமாக காய்யச்சல் ஏற்பட்டதால் உடல் சோர்ந்து மயங்கியுள்ளார். அதனால் ராதிகாவின் தாய் லோகம்பாள் தனியார் காரில் அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு ராதிகாவை அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் பனங்குளம் அருகே செல்லும் போது ராதிகா பரிதாபமாக உயிரிழந்தார். அதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பனங்குளத்தில் ஒரு சிறுமி டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்த நிலையில் அடுத்த 2 நாட்களில் ராதிகாவும் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

- பகத்சிங்

சார்ந்த செய்திகள்