Skip to main content

உளுந்தூர்பேட்டை அருகே விபத்து- குழந்தையின் கண் எதிரே தந்தை பரிதாப சாவு

Published on 01/01/2018 | Edited on 01/01/2018

உளுந்தூர்பேட்டை அருகே விபத்து- 
குழந்தையின் கண் எதிரே தந்தை பரிதாப சாவு

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள காட்டுநெமிலி கிராமத்தில் உளுந்தூர்பேட்டை - விருத்தாசலம் சாலையில் அந்த பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் உளுந்தை உலர வைத்துள்ளார். அப்போது அந்த வழியாக தனது குழந்தையுடன் உளுந்தூர்பேட்டை நோக்கி வந்த விருத்தாசலம் வட்டம் எடைச்சத்தூர் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர் எதிர்பாராத விதமாக உளுந்தில் சறுக்கி விழுந்தார். இதில் உளுந்துக்கு பாதுகாப்பாக சாலையில்  வைக்கப்பட்டிருந்த கல்லில் அடிபட்டு முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

முருகன் சமீபத்தில் தான் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார் என்பதும், அவரது மனைவி தற்பொழுது கருவுற்று இருப்பதும் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

தானியங்களை சாலையில் கொட்டி உலர வைத்ததின் விபரீதம் ஒரு குடும்பத் தலைவர் உயிர் போக காரணமாக உள்ளது.  உடனடியாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காட்டுநெமிலி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்