சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் தெற்கு வீதியில் உள்ள விஎஸ்டி ட்ரஸ்ட் இடத்தில் நேற்று மாலை 39-வது நாட்டியாஞ்சலி விழா தொடங்கியது. இந்த விழா வரும் 23-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாட்டிய கலைஞர்கள் கலந்துகொண்டு பரதநாட்டியம், குச்சிபுடி, மோகினி ஆட்டம், கதக், ஒடிசி மற்றும் நாட்டிய நாடகங்கள் ஆட உள்ளனர்.
நேற்று மாலை மங்கல இசையுடன் விழா தொடங்கியது. புதுடில்லி காயத்ரி ஜெயராமன் மற்றும் யுஎஸ்ஏ கலாதாரா ஆர்ட்ஸ் அகாடமியின் பரதம், யுகே நிருத்ய சங்கீத அகாடமி மாணவிகளின் தசாவதார நாட்டிய நாடகம், கொல்கத்தா ஸ்ரீஜன்சந்தா ஒடிசி நடனமும், விசாகப்பட்டினம் கூச்சிப்புடி கலாகேந்திரா மாணவிகளின் குச்சிப்புடி நடனம் உள்ளிட்டவை நடைபெற்றது. மற்றும் பெங்களூரைச் சேர்ந்த நடன கலைஞர்கள் பங்கேற்ற பரத நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக துவக்க விழா நிகழ்ச்சியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மனிதவளத் துறை இயக்குனர் விக்ரமன் கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார். மனிதவளத்துறை தலைமை பொது மேலாளர் மோகன் அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தர் முருகேசன் கலந்துகொண்டு பேசினார் இதற்கான ஏற்பாடுகளை நாட்டியாஞ்சலி அறக்கட்டளையின் செயலாளர் சம்பந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.