Skip to main content

இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கத்தின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைப்போர் விவரம்

Published on 07/08/2017 | Edited on 07/08/2017

இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கத்தின் மாபெரும் 
கண்டன ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைப்போர் விவரம்


இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கத் தலைவர், முன்னாள் எம்.பி., டாக்டர் கே.பி.இராமலிங்கம் அறிவிப்பு:
 
இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மத்திய  -  மாநில அரசுகளின் விவசாய விரோத கொள்கைகளைக் கண்டித்து, மிக முக்கியமாக காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும் - தமிழகத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான கடன் தள்ளுபடி செய்யவும் - முழுமையான வறட்சி நிவாரணம் அளித்திடவும் - பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்ஸ் முழுமையாக வழங்கிட வலியுறுத்தியும் - காவிரி டெல்டா பகுதியை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கவும் - நதிகள் இணைப்பு குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் - கரும்பு நிலுவைத் தொகை முழுமையாக வழங்கிட வலியுறுத்தியும்,

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவோடு தமிழ்நாட்டில் விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து வருகிற 16-8-2017 புதன்கிழமை, காலை 10.00 மணிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், “மாபெரும் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் - விவசாய சங்கத் தலைவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, இந்த ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து கண்டனப் பேருரை ஆற்றிட உள்ளனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு துவக்கி வைப்போர் விவரம்
 
        1. காஞ்சிபுரம்      -      துரைமுருகன், எம்.எல்.ஏ.,
                                 (தி.மு.க. தலைமைக் கழக முதன்மைச் செயலாளர்,
                                 சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்.)
                                  தெய்வசிகாமணி
                                 (தமிழ்நாடு விவசாய சங்கங்களின் இயக்கத் தலைவர்)
 
 
 
        2. தஞ்சாவூர்       -       எஸ். திருநாவுக்கரசர்
                                 (தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர்)
                                 டாக்டர் துரைமாணிக்கம்
                                 (தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் (சி.பி.ஐ)
                                  சேரன்
                                 (கௌரவத்தலைவர், விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம்)
 
        3. திருவாரூர்      -       ஜி. இராமகிருஷ்ணன்,
                                 (மாநில செயலாளர்,இந்திய கம்யூனிஸ்ட்கட்சி)
                                  மன்னை ரங்கநாதன்,
                                 ( தலைவர், காவிரி பாசன விவசாயிகள் சங்கம்)
                                  பி.எஸ். மாசிலாமணி,
                                  (மாநில துணைச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சி.பி.ஐ.) 
 
        4. மதுரை         -       ஆர். முத்தரசன்,
                                 (மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
                                  கணேசன்,
                                 (தி.மு.க. விவசாய அணி துணைச் செயலாளர்)
 
        5. திருவள்ளூர்     -      தொல். திருமாவளவன்,
                                 (விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்)
                                  பி.சண்முகம்,
                                 (மாநிலபொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சி.பி.எம்.)
 
        6. கோவை        -       டாக்டர் கே.பி.இராமலிங்கம், முன்னாள் எம்.பி.,
                                 (தலைவர், இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கம்,
                                 மாநில தி.மு.க. விவசாய அணிச் செயலாளர்)
 
        7. சேலம்          -       கு. செல்லமுத்து,
                                 (உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர்)
 
        8. நாகப்பட்டினம்   -       கே. பாலகிருஷ்ணன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்,
                                 (தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சி.பி.எம்)
 
        9. திருச்சி         -       பி.ஆர். பாண்டியன், 
                                 (அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர்)
                                  பி. இந்திரஜித்,
                                 (துணைத் தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சி.பி.ஐ.)
                                  டி. இரவீந்திரன்,
                                 (பொதுச்செயலாளர், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், சி.பி.எம்.)
                                 பாலு தீட்சிதர்,
                                 (தலைவர், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம்)
 
       10. கிருஷ்ணகிரி    -       பவன்குமார்,
                                 (காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவர்)
                                  லகுமைய்யா,
                                 (தமிழ்நாடு விவசாயிகள் சங்க துணைத்தலைவர் சி.பி.ஐ.)
 
       11. விழுப்புரம்      -       விருத்தகிரி,
                                 (தேசிய தலைவர், இந்திய விவசாயிகள் சங்கம்)
                                
       12. கரூர்           -       கே.வி.இராஜ்குமார், 
                                 (தலைவர், தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம்)
                                  கே. அன்பழகன்,
                                 (துணைத் தலைவர், இந்திய விவசாயிகள் சங்கம்)
 
       13. நாமக்கல்       -       கரூர் ம. சின்னசாமி, 
                                 (மாநில தி.மு.க. விவசாய அணிச் செயலாளர்)
 
       14. திண்டுக்கல்     -      ஏ.கே.எஸ். விஜயன், முன்னாள் எம்.பி.,
                                 (மாநில தி.மு.க. விவசாய அணிச் செயலாளர்)
 
       15. பெரம்பலூர்     -       கார்மாங்குடி வெங்கடேசன்
                                 (பொதுச்செயலாளர், தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகள் சங்கம்)
                                
       16. திருப்பூர்        -      கம்பம் இராமகிருஷ்ணன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்
                                 (மாநில தி.மு.க. விவசாய அணி துணைத்  தலைவர்)
 
       17. விருதுநகர்      -      எல். மூக்கையா,  சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்
                                 (தி.மு.க. விவசாயத் தொழிலாளர் அணி  தலைவர்)
 
       18. நீலகிரி         -       ஆர். அருட்செல்வன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்
                                 (மாநில தி.மு.க. விவசாய அணி இணைச் செயலாளர்)
 
       19. சிவகங்கை      -     குணசேகரன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்
                                 (தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சி.பி.ஐ)
 
       20. வேலூர்         -        எச். அப்துல் பாசித், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்
                                 (மாநிலச் செயலாளர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்)
                                  ஆதிசேஷன்,
                                 (தி.மு.க. விவசாய அணி துணைச் செயலாளர்)
                                 நாகப்பன்,
                                 (மாநிலப் பொருளாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சி.பி.எம்)
                                 கீதா குமரேசன்,
                                 (தலைவர், வேலூர் அம்முண்டி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கம்)
 
       21. திருநெல்வேலி  -      உ. மதிவாணன், எம்.எல்.ஏ.,
                                 (மாநில தி.மு.க. விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர்)
 
       22. திருவண்ணாமலை -    டேம் டி. வெங்கடேசன்,
                                 (மாநில தி.மு.க. விவசாய அணி துணைச் செயலாளர்)
 
       23. தூத்துக்குடி     -       எஸ். அப்துல் காதர்
                                 (மாநில தி.மு.க. விவசாய அணி இணைச் செயலாளர்)
                             எஸ். நல்லையா,
                                 (துணைத் தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சி.பி.ஐ.)
          
       24. தேனி           -  முருகவேல், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்
                                 (மாநில தி.மு.க. விவசாய அணி துணைச் செயலாளர்)
 
       25. அரியலூர்       -    பூ. விஸ்வநாதன்,
                                 (தலைவர், ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம்)
 
       26. ஈரோடு         -  துளசிமணி,
                                 (துணைத் தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சி.பி.ஐ.)
 
       27. புதுக்கோட்டை  -    முகமது அலி,
                                 (தலைவர், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம்)
                                 வி.என். மணி
                                 (மாநில தி.மு.க. விவசாய அணி துணைச் செயலாளர்)
                                 ஜி.எஸ்.தனபதி,
                                 (செயலாளர், இயற்கை விவசாயிகள் சங்கம்)
                              எம். மாதவன்,
                                 (மாநில நிர்வாகக்குழு உறுப்பினர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சி.பி.ஐ)
 
       28. இராமநாதபுரம்   -      ஏ.சுப்பரமணியன்,
                                 (மாநில தி.மு.க. விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர்)
                             சோழந்தூர் பாலகிருஷ்ணன்
                                 (தலைவர், சோழந்தூர் மற்றும் 72 கண்மாய் பாசன சங்கம்)
 
       29. தருமபுரி        -     ஆர். கோபாலகிருஷ்ணன்,
                                (தலைவர், மரவள்ளி உற்பத்தியாளர்கள் நலச் சங்கம்)
                                  சின்னுசாமி,
                                 (அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மண்டல தலைவர்)
 
         30. நாகர்கோவில்   -        கு.செல்லப்பா,
                                  (மாநில தி.மு.க. விவசாய அணி துணைச் செயலாளர்)
 
மேலும், அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. விவசாய அணி  - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சி.பி.எம். - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சி.பி.ஐ. -  உழவர் உழைப்பாளர் கட்சி  - இந்திய விவசாயி சங்கங்களின் கூட்டமைப்பு - தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம் - அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு - தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் - தமிழ்நாடு காங்கிரஸ் விவசாய பிரிவு - தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் - விடுதலை சிறுத்தைகள் விவசாய சங்கம் - தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் - தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் - தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் மாவட்ட அளவில் இயங்கும் பாசன சங்கங்கள், விவசாய விளைபொருள் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் - அனைத்து கரும்பு ஆலை கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கங்கள் ஆகிய சங்கங்களின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் தத்தமது பகுதியில் உள்ள விவசாயிகளை பெருந்திரளாக திரட்டி, மத்திய-மாநில அரசுகளின் விவசாய விரோத கொள்கைகளை கண்டித்து நடைபெறும் இம்மாபெரும் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச் செய்திட வேண்டுமென தமிழக விவசாயிகளின் சங்கங்களின் சார்பில் வேண்டுகிறேன்.’’
 

சார்ந்த செய்திகள்