Skip to main content

பாரம்பரிய முறைப்படி தாம்பூலத்தில் வெற்றிலைப் பாக்கு வைத்து நிவாரணப் பொருட்களை வழங்கிய இளைஞர்கள்!

Published on 27/04/2020 | Edited on 27/04/2020
r

 

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே பொய்யூர் கிராமத்தில் உள்ள இருளர் சமூகத்தினருக்கு வெற்றிலை தாம்பூலத்துடன் நிவாரணப் பொருட்களை இளைஞர்கள் வழங்கினர். 

 

பொதுவாக நிவாரணப் பொருட்களை அப்படியே வழங்குவது வாடிக்கை. ஆனால் நம்மாழ்வார் கொள்கை வழியில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரும் இளைஞர்கள் குழுவினர் கொடுக்கும் நிவாரணப் பொருட்களை பாரம்பரிய முறைப்படி மரியாதையுடன் தாம்பூலத்தில் வெற்றிலைப் பாக்குடன் அரிசி , பருப்பு எண்ணெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள்,  கடுகு,  உப்பு என குடும்பத்துக்கு தேவையான காய்கறிகளையும் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினர். 

 

r

 

இந்த சம்பவம் நிவாரணப் பொருட்களை வாங்கிய மக்களுக்கு புதுமையான அனுபவத்தை தந்தது. அவர்கள் மெய்சிலிர்த்தனர். இந்த சம்பவம் இருளர் சமூக மக்களிடம் பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

இது குறித்து அந்த இளைஞர்களிடம் பேசியபோது,   ‘’வெறுமனே நிவாரணப் பொருட்களை கொடுத்து விட்டு செல்லாமல் அவர்களுக்கு உண்மையான ஆறுதலை தரவும் பாரம்பரிய முறைப்படி மரியாதையுடன் மன்னர்கள் நம் முன்னோர்கள் பரிசில் மற்றும் உதவும் போது தாம்பூலத்தில் கொடுத்து வரும் மரபைக் கடைபிடித்தனர். மேலும் வறுமையில் வாடும் சக மனிதர்களை அன்போடு நடத்த வேண்டும் என்ற மாண்பினை காக்கவே இப்படி ஒரு முயற்சியினை செய்து வருகிறோம்’’ என்றனர். 

 

சார்ந்த செய்திகள்