Skip to main content

காசி வழக்கில் ஆஜராக மறுத்த நாகர்கோயில் வழக்கறிஞர்களுக்கு மயிலாடுதுறை வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு பாராட்டு!

Published on 16/05/2020 | Edited on 16/05/2020

 

 Cuddalore - corona virus

 

இளம் பெண்களைச் சீரழித்த காசி வழக்கில், நாகர்கோயில் வழக்கறிஞர்கள் ஆஜராக மாட்டார்கள் என நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் அறிவிப்பிற்கு, மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு பாராட்டுத் தெரிவித்துள்ளது.
 


இது குறித்து கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் டாக்டர் ராம.சேயோன் கூறுகையில், "பல பெண்களைச் சீரழித்த காசி வழக்கில், நாகர்கோயில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள் என நாகர்கோயில் வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்திருப்பது, வரவேற்கப்படவேண்டிய வரலாற்று சிறப்புமிக்க அம்சமாகும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் வழக்கறிஞர்கள் ஆஜராகாமல் இருந்தாலே, பெரும்பாலான குற்றங்கள் தடுக்கப்படும். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் வழக்கறிஞர்கள் ஆஜராக மாட்டார்கள் எனக் குற்றவாளிகளின் மனதில் பதிந்து விட்டாலே, குற்றவாளிகள் குற்றம் செய்ய தயங்கி அஞ்சுவார்கள். 

இந்திய தேசத்திற்கு நாகர்கோவில் வழக்கறிஞர்கள் முடிவு ஒரு மிகச்சிறந்த வழிகாட்டுதலாகவும் முன் உதாரணமாகவும் அமைந்துள்ளது. ஏற்கனவே பொள்ளாச்சியில் இது போல் நடந்த கொடூரமான சம்பவத்திலும் அங்குள்ள வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜராகமல் எதிர்ப்பு தெரிவித்து பெண் குலத்தைக் காத்தனர். வழக்கறிஞர்களுக்குப் பெருமை சேர்த்தனர். அது போலவே நாகர்கோவில் வழக்கறிஞர்களை இந்த நாடே பாராட்டும்.
 


கொடூரமான சம்பவத்தில் பொதுமக்களைக் காக்கும் ஆரோக்கியமான முடிவுகளை எடுத்துள்ள நாகர்கோயில் வழக்கறிஞர்களின் பொற்பாதங்களை வணங்கி நெஞ்சார்ந்த நன்றியையும், உள்ளார்ந்த பாராட்டுதலையும் மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கிறோம்.

அதுபோல விழுப்புரம் சிறு மதுரையைச் சேர்ந்த சிறுமி ஜெயஸ்ரீ கொலை வழக்கிலும், வழக்கறிஞர்கள் ஆஜராக மாட்டார்கள் என விழுப்புரம் வழக்கறிஞர்கள் அறிவிக்க வேண்டும்," எனக் கூறியிருக்கிறார்.
 

http://onelink.to/nknapp


"கரோனா விவகாரத்தால் சத்தமே இல்லாமல் இருக்கிற, படுபாதகச் சம்பவமான காசியின் விவகாரத்தை 'நக்கீரன்' மட்டுமே தொடரந்து வெளிக்கொண்டுவருகிறது. நக்கீரன் இணையத்தின் மூலம் பேசிய 'நக்கீரன்' ஆசிரியரின் பேச்சு சாமானியனையும் நரம்பு புடைக்கச் செய்தது. அவர் பேசும் போது, பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக அங்குள்ள வழக்கறிஞர்கள் ஆஜராகமாட்டோம் எனச் சொன்னதுபோல நாகர்கோயில் சம்பவத்திலும் அங்குள்ள வழக்கறிஞர்கள் முடிவெடுத்தால் நல்லது எனக் கூறியிருந்தார். நக்கீரன் ஆசிரியர் அவர்கள் கூறியதும், அதனை ஏற்று இந்த முடிவை வழக்கறிஞர்கள் எடுத்துள்ளதும் பாராட்டுக்குறியது," என்கிறார்கள் கும்பகோணம் வழக்கறிஞர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்