Skip to main content

காவல்துறையின் அலட்சியத்தால் இளம்பெண் வெட்டிக்கொலை;ரவுடி திருட்டுக்குமாரின் அட்டூழியம்

Published on 23/02/2019 | Edited on 23/02/2019

 

பாலியல் ரீதியாக இனங்க மறுத்த பெண்ணை திருட்டுக்குமார் என்பவன் கொலை செய்ததால் 3 வயது குழந்தை அனாதையான சம்பவம் வேளாங்கண்ணி பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.  காவல்துறையில் பாதுகாப்புக் கேட்டு கிடைக்காமல் போன சில தினங்களுக்குள் இந்த சம்பவம் நடந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் காவல்துறையின் மீது பெரும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது.

 

s

 

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகில் உள்ளது தெற்குபொய்கைநல்லூர் கிராமம். அங்கு  பூ கடைகளுக்கு பூ கட்டிக்கொடுத்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார் சரண்யா 28. அவரது 3 வயது குழந்தையோடு, கணவர் ஆனந்தவேலனோடு வசித்து வருகிறார்.  அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான திருட்டுகுமார் என்கிற கணேஷ்குமார் என்பவன் சரண்யாவுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளான்.  இதை சரண்யா தனது கனவரிடம் கூற, சரண்யாவின் கணவர் ஆனந்தவேலனுக்கும், திருட்டு குமாருக்கும் மோதல் ஏற்பட்டது. இது குறித்து காவல்துறையில் கூறியும் பயனில்லை. திருட்டு குமாருக்கு துணை போனது வேளாங்கண்ணி போலிசார். திருட்டுகுமாரிடம் ஒரு பொய் புகாரை பெற்றுக்கொண்டு சரண்யா கணவர் ஆனந்தவேலனை சிறையில் தள்ளினர். 

 

s

 

ஆனந்தவேலன் சிறையில் இருந்த சமயத்தில் திருட்டுகுமார் தொடர்ந்து சரண்யாவின் வீட்டிற்கு சென்று தகராறு செய்வதும், தொல்லைக்கொடுப்பதுமாக இருந்துள்ளான். யாருடைய ஆதரவும் இல்லாமல் தவித்த ஆனந்தவேலனின் தாயும் மனைவி சரண்யாவும் தனது குழந்தையுடன் சென்று வேளாங்கண்ணி காவல் நிலையத்தில்  மீண்டும் புகார் அளித்துள்ளனர்.  ஆனால் காவல்துறையினரோ வழக்கம் போலவே அலட்சியம் காட்டியுள்ளனர். அதோடு வேளாங்கண்ணி காவல்நிலையத்தில் உள்ள சுகந்தி, எட்வின் ஆகிய காவலர்களும் துப்பாக்கி எடுத்துவந்து உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கனுமா, என அலட்சியமாக கூறிவிட்டனர். 

 

s

 

 இந்த விவகாரத்தில்  தொடர்ந்து அலட்சியம் காட்டிவந்த காவல்துறை தனக்கு சாதகமாக இருந்ததை  சரியாக பயன்படுத்திக் கொண்ட திருட்டுக்குமார் இரவு அரிவாளுடன்  யாரும் இல்லாத சமயத்தில் சரண்யாவின் வீட்டிற்குள் நுழைந்துள்ளான். இதனை எதிர்பார்க்காத சரண்யா தனது 3 வயது மகனுடன் அலறி அடித்துக்கொண்டு வீதிகளில் உள்ள சந்துபொந்துகளில் ஓடியுள்ளார். அக்கம் பக்கத்தினர் யாரும் பயந்துகொண்டு காப்பாற்ற முன்வரவில்லை என்பதையும் சாதகமாக்கிக்கொண்டு, சரண்யாவை கொடூரமாக வெட்டி படுகொலை செய்தார் திருட்டுக்குமார்.  கொலை செய்துவிட்டு எங்கும் தப்பித்து செல்லாமல், துணிச்சலோடு தனது வீட்டிலேயே  சர்வ  சாதாரணமாக உட்காந்திருந்த ரவுடி திருட்டு குமாரை,   போலிசார் கைது செய்தனர்.

 

s

 

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் விசாரணை மேற்கொண்டார்.    அதோடு திருட்டுகுமார் மீது வேளாங்கண்ணி காவல்நிலையத்தில் மட்டும் 3 கொலை வழக்குகளும் பல  திருட்டு வழக்குகளும் இருக்கிறது.

 

பாதுகாப்பு கேட்டு புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காத காரணத்தால், மூன்று வயது மகனின் கண் முன்னே தாய் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாகையில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்