தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வின் கடைசி நாளான இன்று (24/03/2020) பேரவையில் பேசிய முதல்வர் பழனிசாமி, கரோனா தடுப்பு நடவடிக்கையாக ரூபாய் 3,250 கோடிக்கான நிவாரணங்களை அறிவித்தார். "தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரலில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவை இலவசமாக வழங்கப்படும். மார்ச் மாத ரேஷன் பொருட்களைப் பெற தவறியவர்கள் அவற்றை ஏப்ரல் மாத பொருட்களுடன் பெறலாம்". இவ்வாறு முதல்வர் பேசினார்.
இதனிடையே தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவித்தார் முதல்வர் பழனிசாமி. மயிலாடுதுறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று முதல்வர் அறிவித்துள்ளார்.
புதிதாக உருவாகும் மயிலாடுதுறையும் சேர்த்து தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆகிறது.