Skip to main content

பெண் கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய அதிமுக ஒ.செ.

Published on 19/11/2018 | Edited on 19/11/2018
thi

 

நாகை அருகே பெண் கிராம நிர்வாக அலுவலரை அதிமுக ஒன்றியசெயலாளர் தாக்கியதால்  காயமுற்றவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட அகரகடம்பனூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக சித்ரா என்பவர் பணியாற்றி வருகிறார்.  இவர் நாகை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் கடந்த 15 ஆண்டுகளாக கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.

 

இந்நிலையில் அகரகடம்பனூர் கிராமத்திற்கு கடந்த ஒருமாதத்திற்கு முன்புதான் செல்வி பணிமாற்றம் பெற்று சென்றுள்ளார்.  அந்த கிராமத்தில் நடைபெற்றுவரும் மணல் கொள்ளையை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளார். இந்த நடவடிக்கையின் போது அனுமதியின்றி மணல் எடுத்த கீவளூர் அதிமுக ஒன்றியச் செயலாளர் சிவபாலனை நிர்வாக அலுவலர் செல்விநடவடிக்கை எடுக்கப்போவதாகவும் எச்சரித்துள்ளார்.

 

இந்நிலையில் புயல் காரணமாக அகரகடம்பூர் கிராமத்தில் உள்ள நிவாரண  முகாமில் செல்வி பணியில் இருந்தபோது கடந்த 16ம் தேதி ஒன்றியசெயலாளர் சிவபாலன் செல்வியிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியிருக்கிறார். இந்தசம்பவத்தால் பாதிக்கப்பட்ட செல்வி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 

செல்வி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் உரிய நடவடிக்கை  எடுக்காததால் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.  போராட்ட தகவல் யறித்த காவல்துறையினர் அவசரஅவசரமாக சிவபாலன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

 ஆனால் இதுவரை அதிமுக ஒன்றியச் செயலாளர் சிவபாலனை காவல்துறையினர் கைது செய்யவில்லை அவருக்கு ஆதரவாக செயல்படுவதாக பாதிக்கப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் செல்வி குற்றம்சாட்டியுள்ளார்.  மேலும் காவல்துறையினர் உடனடியாக அவரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்