திருத்தணி முருகன் கோயில் பெயரில் முப்பது லட்சம் மணல் கொள்ளை
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகன் கோயில் உள்ளது. இந்த கோயில் ராஜ கோபுரம் கட்ட மணல் தேவை என்று கோயில் நிர்வாகம் கலெக்டரிடம் அனுமதி கேட்டு மனு கொடுத்தது. ஆனால் அனுமதி கிடைக்கவில்லை அதன் பிறகு திருத்தணி ஆர்.டி.ஓ ஜெயராமனிடம் கோயில் நிர்வாகம் இருபது லோடுக்கு அனுமதி வாங்கியது.
நல்லாட்டூரில் உள்ள கொசசஸ்தலை ஆற்றில் மணல் எடுத்து வந்தனர். இதில் அதிமுக பிரமுகர்களின் மூன்று லாரியும் பணியில் ஈடுபட்டு இருந்தது. மணல் எடுத்துச் சென்ற அனைத்து வாகனங்கலும் ஒரு லோடு மணலை மட்டும் கோயில் பணிக்கு போட்டுவிட்டு மற்ற லோடு மணலை கள்ளச்சந்தையில் முப்பத்தி ஜந்தாயிரம் ரூபாக்கு (3யூனிட்) விற்றுள்ளனர். இது போல் நூறு லோடுக்கு மேலாக மணலை திருடி விற்றுவிட்டனர்.
இந்நிலையில் திருத்தணி தாசில்தார் பரணிதரனுக்கு மணல் கொள்ளை தொடர்பாக தகவல் தெரிந்ததும் நல்லாட்டூர் கொசசஸ்தலை ஆற்றில் மணல் ஏற்றிக் கொண்டிருந்த அதிமுக பிரமுகர் மணிகண்டன் ட்ரேக்டரை பறிமுதல் செய்து எடுத்து வந்த இருபத்தி ஜந்தாயிரம் அபராதம் விதித்தார். ஆனால் அதிமுக வி.ஜ.பி.கள் தசரதன், வரதன் ஆகியோரின் லாரிகளை பிடிக்காமல் தப்பிக்க விட்டார். கொள்ளையடிக்கப்பட்ட மணல் திருத்தணி பகுதிகளில் நேருநகர், பைபாஸ் சாலை, காசிநாதபுரம், கார்திகாபுரம், காந்திரோடு ஆகிய பகுதிகளில் மணலை விற்றுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட மணலின் மதிப்பு முப்பது லட்சத்திற்கு மேலாக இருக்கும் என்கிறார்கள் சில வருவாய்த்துறை அதிகாரிகள்.
-தேவேந்திரன்