Skip to main content

முருகன் கோயில் குடமுழுக்கு; துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!

Published on 27/01/2023 | Edited on 27/01/2023

 

Murugan Temple Kumbabhishekam; Durga Stalin's participation!

 

முருகனின் ஆதிபடை வீடான எட்டுக்குடி முருகன் கோயில் குடமுழுக்கு பெருவிழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 

நாகை மாவட்டம், எட்டுக்குடியில் அமைந்துள்ள முருகனின் ஆதிபடை வீடான பிரசித்தி பெற்ற எட்டுக்குடி சுப்ரமண்ய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா கடந்த 23ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கோயிலில் உள்ள இடும்பன், கடம்பன், விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பூர்ணாஹூதி தீபாராதனைகள் நடைபெற்று வந்தன. இன்று காலை ஆறு கால யாகசாலை பூஜைகள் முடிவுற்ற பின்னர் மேளதாள வாத்தியங்களுடன் கடங்கள் கோவிலைச் சுற்றி எடுத்து வரப்பட்டன.

 

அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோயிலில் உள்ள கோபுர கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற எட்டுக்குடி முருகன் கோவில் குடமுழுக்கு விழாவில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்