2014, டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் வகையில் மத்திய அரசு புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவந்தது. இது மத அடிப்படையில் நாட்டை பிளவு படுத்துகிறது என்று கூறி எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாணவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் கையெழுத்து இயக்கம், கோலம் போடும் போராட்டம் என்று பல விதமான போராட்டங்களை திமுக முன்னெடுத்தது.
இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு வரி இருப்பதை நிரூபித்தால் அரசியலைவிட்டு விலகத் தயார் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார். மேலும் தமிழகத்தில் பொய் கூறி ஸ்டாலினால் இனி எதுவும் செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.