ரஜினிக்கு இனி சிஸ்டம் புரியும்- வைத்திலிங்கம் எம்.பி.
தஞ்சையில் இன்று வைத்திலிங்கம் எம்.பி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது.. தஞ்சை பகுதி விவசாயிகள் பாதிக்காத அளவில் மேட்டூர் அணையில் இருக்க 10 ஆயிரம் அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வர் காப்பீடு 95% கிடைத்தது விட்டது. 5 % விரைவில் கிடைக்கும் என்றார்.
ரஜினி அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு ஜனநாயக நாட்டில் யாரும் அரசியலுக்கு வரலாம். சிஸ்டம் சரியில்லை என்று மொத்தமாக சொல்லி இருக்கிறார். வெளியில் இருந்து பார்க்கும் போது எப்படி தெரியும். இப்ப வந்துட்டார் இனி அவரே புரிந்து கொள்வார். மேலும் கருத்து சொல்ல முடியாது.
2G வழக்கு மேல் முறையீடு செய்ய மத்திய அமைச்சர் சொல்லி இருக்கிறார் அதில் தீர்ப்பு மாறும் என்றார்.
- இரா.பகத்சிங்