குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு பெண் குழந்தைகளை பெற்ற தாயே கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக வெளியான சம்பவம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் திருமங்கைபட்டியை சேர்ந்தவர் ரஞ்சிதா. இவர் திருமலை பகுதியில் தன்னுடைய குழந்தைகளை நானே கிணற்றில் தள்ளி கொன்று விட்டேன் என பலரிடமும் சொல்லிக் கொண்டு சுற்றி திரிந்துள்ளார். முதலில் அவர் பொய் சொல்கிறார் என நினைத்த பொதுமக்கள் இறுதியில் சந்தேகமடைந்து போலீசாரிடம் இதனைத் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அந்த பெண்ணை அழைத்து சென்று விசாரித்தனர்.
அப்பொழுது கீழப்பூங்குடி பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் குழந்தைகளை தள்ளிக் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். உடனடியாக சம்பந்தப்பட்ட கிணற்றிற்கு சென்று பார்த்த பொழுது கிணற்றில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. உடனடியாக சடலங்கள் மீட்கப்பட்டது. நடத்தப்பட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை காரணமாக குழந்தைகள் இருவரையும் கிணற்றில் தள்ளியதாக ரஞ்சிதா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் சிவகங்கை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.