Skip to main content

கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த கல்லூரிக்கு ரூ.15 லட்சம் அபராதம்..!

Published on 25/10/2017 | Edited on 25/10/2017
கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த கல்லூரிக்கு ரூ.15 லட்சம் அபராதம்..!

சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ளது சக்தி கைலாஸ் கல்லுரி. டெங்கு கொசு உற்பத்தி செய்யும் வகையில் கல்லூரியின் உட் பகுதியில் குப்பை கூழங்களை சேகரித்து வைத்திருந்த கல்லூரியில் இன்று காலை ஆய்வு மேற்க்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் சதீஸ் கல்லூரி நிர்வாகத்துக்கு ரூ.10லட்சம் அபராதம் விதித்தார்.

அது போலவே புதிய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் வசந்தம் ஹோட்டலுக்கு ரூ.5 லட்சம், பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ARKகாம்பளக்ஸில் உள்ள மூன்று திரைஅரங்குகளுக்கு ரூ.5லட்சம் அபராதம் விதித்துள்ளார்.

இது போலவே மாவட்ட ஆட்சியர் ரோகினி மேற்கொண்ட ஆய்வில் LRN டிரான்ஸ்போர்ஸ் நிறுவனத்துக்கு ௹.15 லட்சமும், சைத்தன்யா என்ற தனியார் பள்ளிக்கு ரூ.2 லட்சமும் அபராதம் விதித்துள்ளார். 
இதையடுத்து சேலத்தில் இன்று மட்டும் ரூ.37 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

- சிவசுப்பிரமணியம்

சார்ந்த செய்திகள்