Skip to main content

நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல்... நிரம்பி வழியும் எழும்பூர் மருத்துவமனை!

Published on 14/09/2022 | Edited on 14/09/2022

 

nn

 

ஒரே நாளில் நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வருவதால் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை நிரம்பி வழிந்து வருகிறது.

 

குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலமான அக்டோபர், செப்டம்பர் காலங்களில் ஃப்ளு காய்ச்சல் அதிமாக குழந்தைகளை தாக்கும். இந்நிலையில் இந்த வருடமும் ஃப்ளு காய்ச்சல் அதிமாக குழந்தைகளை தாக்கியுள்ளது. இதன்காரணமாகவே எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையிலிருந்த 300 படுக்கைகளும் நிரம்பியுள்ளது. கூடுதல் படுக்கை வசதிகளை மேற்கொள்ள மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எழும்பூர் மருத்துவமனை அல்லாது பிற அரசு மருத்துவமனைகளிலும் குழந்தைகள் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளது அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்