Skip to main content

கூடுதல் போதைக்காக “டாஸ்மாக்” சரக்கில் கலப்படம்; இந்து முன்னணி செயலாளர் கைது..!

Published on 02/08/2017 | Edited on 02/08/2017
கூடுதல் போதைக்காக “டாஸ்மாக்” சரக்கில் கலப்படம்;
இந்து முன்னணி செயலாளர் கைது..!

கூடுதல் போதைக்காக “டாஸ்மாக்” சரக்கில் கலப்படம் செய்த இந்து முன்னணி வால்பாறை நகர செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சி பகுதியில் “டாஸ்மாக்” மதுக்கடைகள் இல்லாததால், அருகிலுள்ள ரொட்டிக்கடை எஸ்ட்டேட் மற்றும் சோலையாறு அணைப் பகுதியில் உள்ள “டாஸ்மாக்” கடைகளில் இருந்து மதுபாட்டில்கள் சிலர் வங்கிக்கொண்டுவந்து, வால்பாறையில் உள்ள தங்களின் வீடுகளில் பதுக்கிவைத்துக்கொண்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலை அடுத்து வால்பாறை போலீஸார் அப்பகுதியை கண்காணித்து வந்தனர்.

இதில், கூடுதல் போதை வருவதற்காக சிலர் “டாஸ்மாக்” மதுபாட்டிலில் போதை திரவம் கலப்பதாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வால்பாறை காவல் உதவி ஆய்வாளர் நந்தகுமார் தலைமையில் போலீஸார் ரொட்டிக்கடை எஸ்டேட் பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனர்.

அப்போது வால்பாறையை அடுத்த பாரளை எஸ்டேட் தேயிலைத் தோட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து,  அதில் போதை திரவம் கலந்து கொண்டிருந்த வால்பாறை இந்து முன்னணி  நகரப் பொருளாளரான எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த சேகர் (வயது-52) என்பவரை போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர். இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

- பெ.சிவசுப்பிரமணியம்
 

சார்ந்த செய்திகள்