Skip to main content

இரண்டு குழந்தைகளைக் கொன்று தாயும் தற்கொலை!!

Published on 13/01/2021 | Edited on 13/01/2021

 

mom and two child passes away

 


கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவரது மகள் நித்யா (30). கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நித்யாவுக்கும் பிரகாசுக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. 

 

ஒன்றரை வயதில் விஜய் தண்டபாணி என்ற மகன் உள்ள நிலையில் மீண்டும் நித்யா கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடியில் உள்ள தாய் வீட்டிற்குப் பிரசவத்திற்காக வந்துள்ளார் நித்யா. ஒன்றரை மாதங்களுக்கு முன்பு மீண்டும் இரண்டாவதாக நித்யாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 

 

அந்தப் பெண் குழந்தைக்கு சஷ்டிகா என்று பெயரிட்ட நிலையில், தனது இரண்டு குழந்தையுடன் நித்யா தாய் வீட்டில் இருந்துள்ளார். 

 

கடந்த 15 நாட்களுக்கு முன்பு, பிரகாஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்த்துவிட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று (12/01/2021) மாலை நித்யா தனது அறைக்குச் சென்று பிள்ளைகளுடன் இருந்த நிலையில் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், சந்தேகமடைந்த தாய் புவனேஸ்வரி கதவை தட்டியபோது நித்யா திறக்கவில்லை. அதையடுத்து கதவைத்தட்டியும், கூப்பிட்டும் திறக்காததால் தாய் கூச்சலிட்டார். 

 

அவரது கூச்சல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து பார்த்தபோது, நித்யா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்துள்ளார். 

 

மேலும் அவரது இரண்டு குழந்தைகளும், மயங்கிய நிலையில் கிடந்தனர். இதனைத் தொடர்ந்து குழந்தைகளை உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தைகள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் குழந்தைகளைக் கொலை செய்து நித்யா தூக்கில் தொங்கியது தெரியவந்தது.

 

இதுகுறித்து தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நித்யாவின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

அதனைத் தொடர்ந்து நித்யா தற்கொலை செய்து கொண்டாரா?, குழந்தைகளை ஏன் கொலை செய்தார்? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2 குழந்தைகளைக் கொன்று தாயும் தற்கொலை செய்த கொண்ட சம்பவம் கடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மின்சாரம் தாக்கி தந்தை மகன் உயிரிழப்பு.. உயிருக்குப் போராடிய தாய் மருத்துவமனையில் அனுமதி 

Published on 10/10/2022 | Edited on 10/10/2022

 

Father and son due to electrocution.. Mother was admitted to the hospital

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே துணி காயப்போடும் போது மின்சாரம் தாக்கி தந்தை மகன் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சிறுப்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் ராமர். இவரது மனைவி பெரியம்மா. இவர் துணிகளை தனது வீட்டில் இருந்த கொடியில் காயப்போட சென்றுள்ளார். இரும்பால் செய்யப்பட்டிருந்த கொடி மின் கம்பத்தின் ஸ்டே ஒயரை உரசியவாறு சென்றுள்ளது. இதை  பெரியம்மா கவனிக்காமல் துணிகளை காயப்போட்டதால் அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. 

 

மின்சாரம் தாக்கியதில் அதிர்ந்து கத்திய பெரியம்மாவினை பார்த்த அவரது மகன் மணிகண்டன் அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். அவருக்கும் மின்சாரம் தாக்கியது. அறுந்து விழுந்த மின்சார கம்பி அருகில் இருந்த பெரியம்மாவின் கணவர் ராமர் மீது விழுந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. மின்சாரம் தாக்கிய நிலையில் மகனும் சம்பவ இடத்தில் உயிரிழந்து விட்டார். பெரியம்மாவினை காப்பாற்றிய அப்பகுதி மக்கள் அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராமர் மற்றும் மண்கண்டனின் உடல்களை மீட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு மின்சாரம் தாக்கி அதில் தந்தை மகன் உயிர் இழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Next Story

நெல் கொள்முதலுக்கு லஞ்சம் கேட்பதாக புகார்

Published on 21/09/2022 | Edited on 21/09/2022

 

"We will go anywhere if we ask for Rs. 50 per bundle or Rs. 100 per bundle" - Farmers who are unable to sell the grown paddy

 

விருத்தாச்சலம் அருகே நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் தர மறுத்ததால் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாத அதிகாரியை பணியிட நீக்கம் செய்ய விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த தொரவளூர் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்திற்கு முகுந்தநல்லூர், பரவளூர், கச்சிபெருமாநத்தம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் இருந்து, விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த குறுவை சாகுபடி நெல்லை விற்பனை செய்வதற்காக கொண்டு வருவது வழக்கம்.

 

இந்நிலையில் தொரவளூர் கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி என்ற விவசாயியின் நெல்லை, இயந்திரத்தின் மூலம் தூற்றி, கொள்முதல் செய்து கொண்டிருக்கும்போது, மூட்டைக்கு ரூ.50 கொடுக்க வேண்டும் என நிலைய அதிகாரி விஜயகுமார்  கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் விவசாயி, “வறுமையின் காரணமாக, மூட்டைக்கு ரூ.50 கொடுக்க முடியாது. ரூ.30 ரூபாய் தருகிறேன்” என கூறியுள்ளார்.

 

ஆனால் நிலைய அதிகாரி விஜயகுமார், பழனிச்சாமியின் நெல் ஈரமாக உள்ளது எனக் கூறி, கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளை, மீண்டும் விவசாயியின் சாக்கில் தொழிலாளிகள் மாற்றினர். இதனால் விவசாயி பழனிச்சாமி, செய்வதறியாமல் திகைத்து நின்றார். 

 

வாங்கிய கடனையும், குடும்ப செலவையும் சமாளிப்பதற்காக இரவு பகலாக கஷ்டப்பட்டு விளைவித்த நெல் மூட்டைகளை விற்பனை செய்ய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்தால் மூட்டைக்கு 50 கொடு, 100 கொடு என அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் நாங்க எங்கையா போவோம் என ஏழை, எளிய விவசாயிகள் செய்வதறியாது நிற்கின்றனர். 

 

லஞ்சம் தர மறுத்த விவசாயின் மூட்டையை, ஈரம் எனக் கூறி நிறுத்திய நிலைய அதிகாரி விஜயகுமார் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.