மக்கள் மன்றத்தில் மோடி பதில் சொல்லியே
ஆகவேண்டும்: விஷால் தரப்பு ஆவேசம்
நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பு நிறுவனத்தில் மத்திய கலால் துறையின் கீழ் செயல்படும் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவினர் 3 பேர் ஏசி வெங்கடேசன் தலைமையில் மூன்றரை மணி நேரம் சோதனை நடத்தினர். சோதனையில் ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை என தகவல்.
அதிகாரிகள் காரில் ஏறிச்சென்ற பின்னர் விஷால் தரப்பினர் மணிமாறன், கமலக்கண்ணன் மற்றும் விஷால் நற்பணி இயக்கம் முகமது ஷாகிப் ஆகியோர் நடந்த இந்த சம்பவத்திற்கு மோடி மக்கள் மன்றத்தில் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று ஆவேசமாக கூறினர். மேலும், நாங்கள் எந்த மோசடியும் செய்யவில்லை. ஆகவே எங்களூக்கு கவலை இல்லை என்று தெரிவித்தனர்.