Skip to main content

டெல்டாவில் ராணுவத்தை குவித்து மக்களை மிரட்டுகிறார் மோடி - கே.பாலகிருஷ்ணன்

Published on 01/05/2018 | Edited on 01/05/2018
kb

 

குமரி மாவட்டம் குழித்துறையில் இன்று  மா.கம்யூனிஸ்ட் சார்பில் நடக்க இருக்கும் மே தினம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நாகா்கோவில் வந்தார்.  அக்கட்சியின் தமிழ் மாநில செயலாளா் கே. பாலகிருஷ்ணன்.


             அப்போது அவா் நிருபா்களிடம் பேசும் போது.....சாதி மதம் மொழிகளை கடந்தும் , நாடு எல்லைகளை கடந்தும் கொண்டாடப்படும் ஓரே தினம் மே தினம் தான். மோடியின் ஆட்சியில் தொழிலாளா்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. தொழிலாளா்கள் மீண்டும் கொத்தடிமை பணிக்கு தள்ளப்பட்டுள்ளனா். தொழிலாளா்களின் நிரந்தர பணியினை பறித்து கான்டிராக்ட் பணியிணை அமுல்படுத்தி வருகின்றனா். தொழிலாளா்கள் போராடி பெற்ற உரிமைகள் எல்லாத்தையும் திட்டமிட்டே மோடி அரசு பறித்து விட்டது.


                    மேலும் நாடு முமுவதும் தலித் மக்கள் மீது வன்முறையை அவிழ்த்து விட்டுள்ளனா். சிறுபான்மையின மக்கள் வேட்டையாடப்பட்டு வருகிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல கட்ட போராட்டங்களை எதிர்கட்சிகள் எல்லாம் ஒன்று சோ்ந்து நடத்தி விட்டோம். கோர்ட்டில் மத்திய அரசிடம் வரைவு திட்டத்தை கேட்டும் மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை. கடைசியாக மே 3-ம் தேதி தாக்கல் செய்வார்கள் என்ற நம்பிக்கையும் இல்லை. மே 12-ம் தோ்தல் வரும் வரை எதையும் உறுதியாக செய்ய மாட்டார்கள்.


                டெல்டா பகுதிகளில் 2 ஆயிரம் துணை ராணுவத்தை குவித்து வைத்து கொண்டு அங்கு மக்களை அச்சுறுத்தி வருகிறார்கள். இதை கேட்டால் அவா்கள் பயிற்சிக்காக குவிக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். அந்த பகுதியை ரசயான மண்டலமாக்க உலக அளவில் டெண்டருக்காக திட்டமிட்டு தான் முன் கூட்டியே ராணுவத்தை குவித்து மக்களை மிரட்டுகிறார் மோடி.


                  மக்கள் கேட்கிற பயனுள்ள திட்டத்தை கொடுக்காமல் வேண்டாத திட்டத்தை திணிப்பது தான் மோடியின் பாணி. ஸ்டொ்லைட்டை மூடுவதற்கான எந்த நடவடிக்கையும் அரசு எடுக்க வில்லை. அனுமதி காலவதி ஆகி விட்ட போதும் மீண்டும் அனுமதி வாங்கி விடுவோம் என்று நிர்வாகம் சொல்லுகிறது.


             குட்கா விவகாரத்தை சி.பி.ஐ விசாரிக்க வேண்டுமென்று கோர்ட் உத்தரவு வரவேற்க்கதக்கது ஒரு முகாந்திரம் இல்லாமல் கோர்ட் உத்தரவு போடாது. அதே போல் கூட்டுறவு தோ்தல் ஜனநாயக ரீதியாக நடக்கவில்லை. கூட்டுறவுகளை அ.தி.மு.க அரசு முக்கால் வாசி கொள்ளையடித்து முடிச்சாச்சி. மீதி இருக்கிறதையும் கொள்ளையடிக்க தான் இந்த தோ்தலை கோர்ட் தடை விதித்தும் மறு உத்தரவு வாங்கி தோ்தலை நடத்துகிறார்கள்.


               மத்திய அரசிடம் இணக்கமாக இருப்பதாக எடப்பாடியும் ஓபிஎஸ்சும் சொல்லுவது மக்களுக்காக இல்லை அவா்களை பாதுகாத்து கொள்ள தான் இணக்கமாக இருக்கிறார்கள். ஒரு திரணற்ற மக்கள் விரோத அரசை தான் எடப்பாடி நடத்தி கொண்டிருக்கிறார் என்றார்.

சார்ந்த செய்திகள்