Skip to main content

திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உண்டா? மு.க.அழகிரி பதில்

Published on 26/02/2019 | Edited on 26/02/2019

 

வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று சென்னை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.   மேலும், திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு குறித்தும் கேள்வி எழுப்பினர். 

அதற்கு அழகிரி,   ‘’நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை.  திமுகவுக்கு முந்தைய தேர்தல் முடிவைப்போல இந்த தேர்தலிலும் இருக்கும்’’என்று தெரிவித்தார்.  

 

a

 

சார்ந்த செய்திகள்

Next Story

விமான கட்டணம் கிடுகிடு உயர்வு; பயணிகள் கடும் அதிர்ச்சி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Air fares hike Passengers shocked

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் வார விடுமுறை காரணமாகப் பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். இதன் காரணமாகப் பேருந்துகள், ரயில்கள் என அனைத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. இத்தகைய சூழலில் சென்னையிலிருந்து கோயம்புத்தூர் மதுரை, திருச்சி, தூத்துக்குடி மற்றும் சேலம் செல்லும் உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. வழக்கமான கட்டணத்தை விட 3 முதல் 5 மடங்கு வரை விமான டிக்கெட் கட்டணங்கள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. இதனால் விமான பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அந்த வகையில் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 957 ரூபாயாக இருந்த விமான கட்டணம் தற்போது 12 ஆயிரத்து 716 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து மதுரைக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 674 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 8 ஆயிரத்து 555 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதிகப்பட்சமாக 11 ஆயிரத்து 531 ரூபாயாக உள்ளது. மேலும் சென்னையிலிருந்து சேலம் செல்ல வழக்கமாக 2 ஆயிரத்து 433 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 5 ஆயிரத்து 572 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து கோவைக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 342 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 8 ஆயிரத்து 616 ரூபாயாக உயர்ந்துள்ளது. 

Next Story

வட்டாட்சியரை தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் மு.க. அழகிரி விடுதலை!

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
MK Alagiri liberation for case of the district officer

கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளூர் வல்லடிகாரர் கோயிலுக்குள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இது குறித்து மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து என்பவர் ஒளிப்பதிவாளர் உடன் சென்று பணப்பட்டுவாடா செய்ததை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தாசில்தார் காளிமுத்துவை தாக்கியதாக மு.க.அழகிரிக்கு எதிராக தாசில்தார் காளிமுத்து தரப்பில் கீழவளவு காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் மு.க.அழகிரி, மதுரையின் துணை மேயராக இருந்த மன்னன், திமுக நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம், ஒத்தப்பட்டி செந்தில், பொன்னம்பலம், தமிழரசன், நீதித்தேவன், சேகர், மயில்வாகனன், ராகவன், ராமலிங்கம், சோலை நாகராஜா, வெள்ளையா பாலகிருஷ்ணன், அய்யனார், கருப்பண்ணன், பாலு, போஸ் உட்பட 21 பேர் மீது அரசு அதிகாரிகளை தாக்குதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை மேலூர் நீதிமன்றத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு தொடரப்பட்டு 2019 ஆம் ஆண்டு வரை நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையே வழக்கு விசாரணை காலத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து வழக்கு விசாரணையின் போது சாட்சிய விசாரணை, அரசுத் தரப்பு வாதங்கள், எதிர்த்தரப்பு வாதங்கள் கடந்த 13 ஆம் தேதி நிறைவு பெற்றன. இந்த வழக்கில் இன்று (16.02.2024) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மு.க. அழகிரி, மதுரையின் முன்னாள் துணை மேயர் மன்னன் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என கூறி நீதிபதி முத்துலட்சுமி 17 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.