Published on 27/04/2020 | Edited on 27/04/2020
கரோனா நோய் பரவலை தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக, பல வீடுகளில் மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோகப் பொருள்கள் பழுதடைந்து உள்ளதால், அந்தக் கடைகளை திறக்க வேண்டும் என்றும், அவற்றை ஆன்-லைன் வியாபாரம் மூலமாகவும் விற்க வேண்டும் என்றும், அதற்கான நேரம் மற்றும் காலத்தை மாண்புமிகு உயர்நீதிமன்றமே நிர்ணயிக்க வேண்டும் என்றும் ஒரு பொதுநல வழக்கை வழக்கறிஞர் ஜி .ராஜேஷ் என்பவர் தொடர்ந்துள்ளார் .
இன்றைக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, மிக விரைவில் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.