தஞ்சையில் இருந்து காணாமல் போன தமிழில் முதன் முதலாக மொழிபெயர்க்கப்பட்ட பைபிள் லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஜெர்மனி நாட்டில் பிறந்த சீகன் பால் என்பவர், கடந்த 1706- ஆம் ஆண்டு நாகை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடியில் கிறிஸ்துவ மத போதகராகப் பணியாற்றினார். இவர் பைபிளின் புதிய அத்தியாயத்தை 1715- ஆம் ஆண்டு தமிழில் மொழி பெயர்த்தார். இந்த பைபிள், அப்போதைய சரபோஜி மன்னருக்கு பரிசாக வழங்கப்பட்டது. பிற்காலத்தில் தமிழக அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டு, தஞ்சை சரஸ்வதி மஹால் நூலக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த பைபிள் காணாமல் போய்விட்டதாக கடந்த 2005- ஆம் ஆண்டு அருங்காட்சியகத்தின் நிர்வாக அலுவலர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில், திருடுபோன பைபிள் கிங்ஸ் கலெக்ஷன் என்ற லண்டன் நிறுவனத்திடம் உள்ளதாக வலைத்தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. சிலைத் திருட்டு தடுப்பு பிரிவினரின் புலனாய்வு விசாரணையில், தஞ்சை அருங்காட்சியகத்தில் திருடப்பட்டது உறுதியானது. யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் மூலம் இந்த பைபிளை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.