அமைச்சர்கள் விபரம் வேண்டுமென்றே தான் நீக்கப்பட்டதா? உயர்நீதிமன்றம் கேள்வி
அரசு இணையதளத்தில் இருந்து அமைச்சர்களின் தொலைப்பேசி எண்கள், இமெயில் விபரங்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அமைச்சர்களின் விபரங்களை மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்றம், அமைச்சர்களின் விபரங்கள் வேண்டுமென்றே தான் நீக்கப்பட்டதா? அல்லது தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் கோளாறு காரணமாக நீக்கப்பட்டதா? என கேள்வி எழுப்பி உள்ளது.
மேலும் இது தொடர்பாக தமிழக அரசிடம் விபரம் கேட்டு ஆகஸ்ட் 21 ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.