Skip to main content

அறப்போர் இயக்கம் மீதான அமைச்சர் வேலுமணியின் அவமதிப்பு வழக்கு தள்ளுபடி!

Published on 26/03/2021 | Edited on 26/03/2021

 

Minister Velumani's contempt case against  Arapor iyakam dismissed!

 

சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என அறப்போர் இயக்கம் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. திமுக தரப்பிலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தேர்தல் சமயத்தில் இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டால் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் ஜூன் மாதத்திற்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

இந்நிலையில், அமைச்சர் வேலுமணி மீது அறப்போர் இயக்கம் தொடர்ந்து ஊழல் புகார் தெரிவித்து வந்தது. அறப்போர் இயக்கம், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களையும் இணையதளங்களில் வெளியிட்டு வருவதாக அமைச்சர் வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று (26.03.2021) தலைமை நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. எதிர்மறையான கருத்துகளை, குற்றச்சாட்டுகளை வைக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவில்லை. இந்த வழக்கை எதிர்மறையாக கருதக்கூடாது என்றுதான் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. எனவே அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் தொடுக்கப்பட்ட வழக்கு எனக் கூறி அவமதிப்பு வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், மனுதாரருக்கு 10 ரூபாய் அபராதம் விதித்தது.

 

அமைச்சர் வேலுமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இது அரசியல் நோக்கத்துடன் தொடரப்பட்ட வழக்கல்ல. நீதிமன்ற உத்தரவை அறப்போர் இயக்கம் தவறாக பயன்படுத்துவதாக தொடரப்பட்ட வழக்கு” என்று விளக்கமளித்த நிலையில், அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அபராதம் விதிக்காமல் வழக்கை மட்டும் தள்ளுபடி செய்தது.  

 

 

சார்ந்த செய்திகள்