Published on 16/06/2019 | Edited on 16/06/2019
கோவையில் இளைஞர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அட்டகாசமாக பந்து வீசி அசத்தினார்.

அன்றாடம் காலையில் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளும் அமைச்சர் எஸ் பி வேலுமணி கோவைப்புதூர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் பயிற்சி மேற்கொண்டார்.

அப்போது அங்கு பத்திரிகையாளர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர். இதைக்கண்ட அமைச்சர் வேலுமணி கிரிக்கெட் மீதான அதீத ஆர்வத்தால் தானும் களத்தில் இறங்கினார். ஆர்வத்துடனும், வேகத்துடனும் அவர் பந்து வீசி அசத்தினார். இதையடுத்து கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் சீருடை வழங்கி அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து உற்சாகப்படுத்தினார்.