தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 32 வது நினைவு நாளையோட்டி மதுரை கே.கே நகரில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு மாலை அணிவித்து மரியாதை செய்தார், முன்னராக 1000 க்கும் மேற்பட்ட அதிமுகவினருடன் ஊரவலகமாக வந்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறுகையில்,
"அதிமுக பிளவுபடும் என ஆருடம் சொன்னவர்களின் வாக்கு பழிக்கவில்லை, 5 ஆயிரம் மைலுக்கு அப்பால் படுத்து கொண்டே வெற்றி பெற்றவர் எம்.ஜி.ஆர், தமிழக முதல்வர் தலைமையில் நல்லாட்சி கொடுக்கப்பட்டு வருகின்றது, பெரியார் குறித்து இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்டர்களுக்கு கண்டனம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக ஆட்சி நடைபெறுகிறது. ஸ்டாலின் அதிமுக ஆட்சி கலைந்துவிடும் என சொன்னார், ஆனால் ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது.
பெரியார் தான் சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கி கொடுத்தார். தமிழ்நாடு என்றுமே திராவிட பூமி, பல மாநிலங்கள் பிளவுப்பட்டு இருந்தாலும் தமிழகம் என்றுமே ஒன்றுபட்டு உள்ளது. தமிழ்நாடு சகோதரத்துவத்துடன் இருக்க பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், கலைஞர் பாடுபட்டார்கள், பெரியாரை யார் இழிவுபடுத்தி பேசினாலும் அவர்கள் கண்டிக்கபடக் கூடியவர்கள்" என கூறினார்.