தமிழ்நாடு நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு இன்று (24.08.2021) முக்கிய அறிவிப்புகளை வௌியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஏற்கனவே 15 மாநகராட்சிகள் உள்ள நிலையில், மேலும் 6 மாநகராட்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வகையில் தாம்பரம், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலுார், சிவகாசி ஆகியவை மாநகராட்சிகளாகின்றன.
பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்துார், நந்திவரம், கூடுவாஞ்சேரி, மானாமதுரை, சுரண்டை, களகாடு, முசிறி, லால்குடி, பொன்னேரி, திருநின்றவூர், சோழிங்கர், தாராமங்கலம், திருமுருகன் பூண்டி, கூடலுார், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, வடலுார், கோட்டக்குப்பம், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை, அதிராம்பட்டினம், திருச்செந்துார் ஆகிய 28 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன. திருச்சி, நாகர்கோவில், தஞ்சாவூர், ஓசூர் மாநகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.