திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி வட்டம், மகிழம்பாடியில் கனிமவள அறக்கட்டளை நிதியின் கீழ் ரூபாய் 30 லட்சம் செலவில் கட்டப்பட்ட அரசு துணை சுகாதார நிலையத்தை மக்களின் மருத்துவ சேவை பயன்பாட்டிற்கு அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
இதனைதொடந்து பேசிய அவர், "சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது போல, இந்த கட்டிடம் கட்டப்பட்டு இன்று பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதில் மருத்துவா்கள், செவிலியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த துணை சுகாதார நிலையத்திலேயே மருத்துவர் தங்கி மருத்துவம் பார்ப்பதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் 30 துணை சுகாதார நிலையங்கள் அமையும், இந்த மகிழம்பாடியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இருக்கும். உங்களுடைய அவசர தேவைக்கு இந்த சுகாதார நிலையம் நிச்சயம் உதவும்" என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் அ.சௌந்தரபாண்டியன், ஒன்றியக் குழுத் தலைவர் தி. இரவிச்சந்திரன், க.வைரமணி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சுகாதாரத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.