Published on 18/07/2022 | Edited on 18/07/2022
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24- ஆம் தேதியுடன் நிறைவடைவதால், அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் இன்று (18/07/2022) நடைபெற்று வருகிறது. ஆளும் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்முவும், காங்கிரஸ், தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். இதற்கான தேர்தல் நாடு முழுவதும் இன்று நடந்தது. இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸும் கரோனா கவச உடை அணிந்துகொண்டு வந்து வாக்களித்தனர்.