Skip to main content

தினகரனுக்கு மாஸ்டரே செயல்தலைவர்தான்- ஜெயக்குமார்

Published on 11/06/2018 | Edited on 11/06/2018

 

சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு பள்ளி விழாவில் கலந்துகொண்ட தமிழக மீன்வளத்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது,

 

தொடர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் பல முறை பேச்சுவார்தை நடத்தியாயிற்று தற்போது சட்டமன்றம் கூடும் நிலையில் அதுபற்றி கருத்து கூறமுடியாது. ஏற்கனவே அரசின் நிலையை அறியும்படி பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டது எனவே அரசின் நிலைப்பாடு எல்லோருக்கும் எல்லாம் செய்யவேண்டும் என்பதுதான் ஆனால் சட்டியில் இருந்தால்தானே  அகப்பையில் வரும் என்பது அவர்களுக்கும் தெரியும் எனவே நிச்சயமாக அவர்களும் உணர்வார்கள்.

 

jayakumar

 

தண்ணீர் திறக்க முடியாது என்று சொன்ன ஒரே முதமைச்சர் எடப்பாடி என டிடிவி.தினகரன் கூறியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.  நேற்றுக்கூட அவர் பதினெட்டாம் படி என்றும் கூறியுள்ளார் அவர் என்ன சபரிமலை சாமியா ?, புலிப்பால் கொண்டுவருபவரா அவர் ?  வேறும் மனப்பால் குடிப்பவர் எனவே அதுவெல்லாம் எடுபடாது.

 

தினகரன் எம்.பி.யாக இருக்கும்பொழுது பாராளுமன்றத்தில்ஒரு தடவைகூட காவிரி பற்றி பேசவில்லை சட்டமன்றதில்  நாங்களெல்லாம்  அம்மா பற்றியும் எம்ஜிஆர் பேரையும் சொல்லிதான் பேச தொடங்குவோம் ஆனால் அவரோ பேசுவதே நான்கு வார்த்தைதான் அதிலும் அம்மா பற்றி ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை. திமுகவுடன் சேர்ந்து அவர்களுடைய குரலைத்தான் அவர் பிரதிபலித்து கொண்டிருக்கிறார் எனவே தினகரனுக்கு மாஸ்டரே செயல்தலைவர்தான்.

 

தமிழக அரசு வீணாக செலவளிக்கிறது என்ற அன்புமணி ராமதாஸின் குற்றசாட்டு ஏற்புடையதல்ல, இன்று தமிழகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், நெசவாளர், கைத்தறி தொழிலாளர், மீனவர், விவசாயிகள்  என எல்லாதரப்பு மக்களுக்கும் அரசு புதுபுது திட்டங்களை செய்து வருகிறது.  இன்று தமிகத்தில் என்ன வளர்ச்சி  இல்லை  ரோடு இருக்கிறது, கரண்ட் இருக்கிறது கனெக்டிவிட்டி இருக்கு இதையெல்லாம் அவர் நிறுத்த சொல்கிறாரா? சும்மா பொத்தம்பொதுவாக சொல்லக்கூடாது எனக்கூறினார். 

 

நடிகர் கருணாஸ் ஆட்சிமாற்றம் விரைவில் வரும் எனக்கூறியுள்ளாரே என்ற செய்தியாளரின் கேள்விக்கு ''காலையில ஒரு வாய் நைட்டு ஒரு வாய்'' என பதிலளித்தார்.   

சார்ந்த செய்திகள்