Skip to main content

தஞ்சையில்  இரவோடு இரவாக திறக்கப்பட்ட ஜெ. சிலை- அதிர்ச்சியில் அதிமுகவினர்

Published on 18/12/2018 | Edited on 18/12/2018
m

 

 கலைஞருக்கு பொது இடத்தில் சிலை வைக்க அனுமதி மறுத்த அதிமுக அரசு ஜெ. வுக்கு மட்டும் பொது இடத்தில் ரகசியமாக இரவோடு இரவாக சிலை திறந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

 தஞ்சை நகரில் பரபரப்பான பகுதி ரயிலடி. அங்கு எம் ஜி ஆர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை அந்த சிலைக்கு அருகில் அதே உயரத்தில் புதிய சிலை ஒன்று மாலையுடன் நிற்பதை பார்த்த மக்கள் அதிர்ச்சியுடன் போய் பார்த்தனர்.  புதிய சிலையாக ஜெ. இரட்டை விரலை காட்டிக் கொண்டிருந்தார்.


காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் எங்களுக்கு தெரியல என்ற சொல்ல.. அப்பறம் எப்படி வைக்கப்பட்டது இந்த சிலை என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் தஞ்சை நகர  ர. ர க்கள்.. எதிர்கட்சி தலைவர்களே போற்றக்கூடிய போர்க்குணம் கொண்ட தலைவி ஜெ .வின் சிலை திறப்பு விழாவை கோலாகலமாக தலைவர்களை அழைத்து வந்து அதிமுக தொண்டர்கள் முன்னிலையில் திறந்திருக்க வேண்டும். ஆனா இப்படி திருட்டுத்தனமா இருட்டுல போய் அம்மா சிலையை திறந்து கேவலப்படுத்திட்டாங்க. அதிமுககாரன் என்று சொல்லவே வெட்கமா இருக்கு என்று வேதனையை கொட்டினார்கள்.
 

சார்ந்த செய்திகள்