‘மெர்சல்’ படத்தின் பெயருக்கு இடைக்கால தடை!
நடிகர் விஜய் நடித்த மெர்சல் பட தலைப்பில் விளம்பரம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மெர்சலாயிட்டேன் என 2014ல் பதிவு செய்த தலைப்பை விஜய் படத்திற்கு பயன்படுத்தியதாக தயாரிப்பாளர் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில், அக்டோபர் -3ம் தேதி வரை மெர்சல் பெயரை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.