ஆளுநருடன் இன்று மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று மாலை 5 மணிக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 21 பேர் முதல்வருக்கான ஆதரவை திரும்பப் பெற்ற நிலையில் ஆளுநரை சந்திக்க திமுக சார்பில் நேரம் கேட்டு கடிதம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து திமுக, காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களுடன் சென்று ஆளுநரை சந்திக்க உள்ள மு.க.ஸ்டாலின். அப்போது சட்டசபையை கூட்டி எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.